Courtrallam and Eco Park

குற்றாலம்

        குற்றாலம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கோவிலும் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
         குற்றாலம் தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர்) அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். தென்காசி தொடர்வண்டி நிலையம் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையமாகும்.
               குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.
         தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன.
    குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் குற்றாலத்தில், ஓர் அருவி, இரண்டு அருவி இல்லை; மொத்தம் 8 அருவிகள் உள்ளன. பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி என சுற்றிச் சுற்றி அருவிகள்தான்.

பேரருவி
                 குற்றாலம் சென்றதும் நம்மை பன்னீர் தெளித்து வரவேற்பது பேரருவி. பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த அருவி. சுமார் 1,200 அடி உயரத்திலிருந்து படிப்படியாக பொங்குமா கடலில் விழுந்து, தரைமட்டத்துக்கு வருகிறது. இதிலிருந்து கிளம்பும் நீர்த்துளிகள் காற்றில் கலந்து வந்து அனைவரையும் தொட்டு வரவேற்கும். இங்கு ஆண்களும் பெண்களும் குளிக்க தனித்தனி இடவசதி உண்டு.

சிற்றருவி 
            பேரருவியில் இருந்து ஐந்தருவிக்குச் செல்லும் வழியில் சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ளது சிற்றருவி. மலை உச்சியிலிருந்து பேரருவிக்கு செல்லும் நீரின் ஒரு பகுதி பிரிந்து சிற்றருவியாக உருமாறுகிறது. இதில் சிறுவர்களும் அச்சமின்றி குளிக்கலாம்.

செண்பகதேவி அருவி 
      குற்றால மலையில் சுமார் 600 அடி உயரத்தில் காணப்படுவது செண்பகதேவி அருவி. சிற்றருவி செல்லும் பாதை வழியாக மலை மீது ஏறிச் சென்றால்தான் இந்த அருவியில் நீராட முடியும். வழியில் அருள்மிகு செண்பகதேவி அம்மன் கோவிலும் உள்ளது. மலை ஏற விரும்புவோருக்கு இது ஒரு நல்ல பயிற்சிக் களம்.

தேனருவி 
                செண்பகதேவி அருவியில் இருந்து ஒத்தையடிப் பாதையில் நடந்து சென்றால் தேனருவியை அடையலாம். பொதிகை மலையின் உச்சியில் சுமார் ஆயிரம் அடிகளுக்கு மேல் பாலாறாகத் தோன்றி அருவியாக கொட்டுவதால் இது தேனருவியானது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உள்ள இந்த அருவியில் குளிப்பது எதற்கும் ஈடாகாது.

ஐந்தருவி
              குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது ஐந்தருவி. மலையில் இருந்து விழும் நீர், ஐந்து கிளைகளாக பிரிந்து கொட்டுவதால் இதற்கு இந்தப் பெயர். இதில் குளித்தால் ஐம்புலன்களுக்கும் உற்சாகம் ஏற்படும். இரவு, பகல் எந்நேரமும் இதில் குளித்துக் குதூகலிக்கலாம். இங்கும் இடஒதுக்கீடு முறை உண்டு. மூன்று கிளைகளில் ஆண்களும், இரண்டு கிளைகளில் பெண்களும் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பழத்தோட்ட அருவி 
                  ஐந்தருவியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் அமைந்துள்ளது பழத்தோட்ட அருவி. இயற்கை எழில் சூழ்ந்த பகுதிக்குள் உள்ள இந்த அருவியில் குளிப்பது பேரானந்த அனுபவம். குற்றாலம் சென்றவர்கள் பழத்தோட்ட அருவியில் குளித்தேன் என்று சொல்வதையே பெருமையாக நினைப்பதுண்டு. காரணம் இந்த அருவியில் எல்லோரும் குளித்துவிட முடியாது. எனவேதான் இதற்கு "வி.ஐ.பி. அருவி' என்ற செல்லப் பெயரும் உண்டு. குற்றாலத்தில் உள்ள வனத் துறையினரின் அனுமதி பெற்று இந்த அருவிக்குச் செல்லலாம்.

பழைய குற்றால அருவி 
                    குற்றாலம் - கடையம் செல்லும் பாதையில் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது பழைய  குற்றால அருவி. சுமார் 600 அடி உயரத்திலிருந்து இந்த அருவி விழுகிறது. இங்கும் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே குளிக்க வசதி உள்ளது.

அங்கே இங்கே குளிப்பதெல்லாம் குளியல் அல்ல. குற்றாலத்தில் குளிப்பதுதான் அசல் குளியல்!
                   "சீசன்' நேரத்தில் ஒரே நாளில், எத்தனை முறை, எத்தனை அருவியில், எவ்வளவு நேரம் குளித்தாலும் சளியோ, காய்ச்சலோ எட்டிப் பார்க்காது. அதுதான் பொதிகை மலை மூலிகையின் மவுசு.
                                தென் மேற்குப் பருவ மழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஆரியங்காவுக் கணவாய் வழியாகப் பாய்ந்து வரும் குளிர்ந்த காற்றைச் சிக்கெனப் பிடித்து சாரல் மழையாகப் பிழிந்து தருகிறது குற்றால மலை.
                                இந்த மழை நீர், மலைகளில் தவழ்ந்து, மூலிகைகளைத் தழுவி, சில்லென்ற குளிர்ச்சியுடன், வெள்ளியை உருக்கிவிட்டது போல அருவியாய்க் கொட்டுவதைப் பார்ப்பதே ஓர் ஆனந்தம்.இரண்டு முழத் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, உடல் முழுக்க நல்லெண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, அருவிக்கு கீழே மணப்பெண் மாதிரி தலையைக் கவிழ்ந்து நின்று குளிக்கும்போது ஏற்படும் சுகமே தனி.
                      தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது போலத்தான் தெரியும். ஆனாலும் அதில் உள்ள சுகம் இருக்கே... அது சொன்னால் தெரியாது; குளித்து அனுபவித்தால் தான் புரியும்.

இவையும் உண்டு...
             குற்றாலத்தில் அருவி மட்டும்தான் என எண்ணிவிடாதீர்கள். குற்றாலநாதர் திருக்கோவில், சித்திரசபை, படகு குழாம்,பாம்புப் பண்ணை, சிறுவர் பூங்கா ஆகியவையும் உண்டு. குற்றாலத்தில் உள்ள குரங்குகள் வினோதமானவை.கையில் வைத்திருக்கும் பொருளை தைரியமாக வந்து பறித்துச் செல்லும்.

                   ஆண்டுதோறும் "சீசன்' காலத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க அரசு சார்பில் ஒரு வார காலம் பல்சுவை விழாவாக "சாரல் திருவிழா' கொண்டாடப்படும்.

Courtesy : Courtrallam Pasu Mark Nallanai

Eco Park

                                      The State’s biggest eco-park has come up in a picturesque spot at Courtallam, a popular destination of tourists,down South.
                    The Establishment of an Eco Park at Courtallam is implemented in the State Horticulture Farm, Courtallam in Tirunelveli District.  This is also very nearer to the famous “Five Falls” of Courtallam.  The total extent of the Park is 37.23 acres.  The total project cost is Rs.573.00 lakhs.  The Eco Park forms part of the Western Ghats. 
           Some of the tourist attractive feature of the Eco Park are Adventure Play Area, Sunken Garden, Fern Garden, Royal Drive, Bamboo Avenue, Rock Garden, Children Play Area, Murals, Butter fly Garden, Eco pond, Stream walk,  etc. The Eco park is illuminated with colourful lights and high mass inside the park. Food court is provided for refreshment and much more attractive features are available for the tourist.


Stay With Us Azure Media

No comments:

Post a Comment